செய்திகள்

சுமித் கனவு அணியில் கோலிக்கு இடமில்லை

ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீபன் சுமித் வெளியிட்டுள்ள கனவு அணியில் தெண்டுல்கர், ஹர்பஜன்சிங் ஆகியோரை தேர்வு செய்தார். இந்த கனவு அணியில் விராட் கோலி இடம் பெறவில்லை.

ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீபன் சுமித் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருக்கிறார்.

இந்தியாவுக்கு எதிராக இன்று நடைபெறும் ஆட்டம் அவருக்கு 100-வது ஒருநாள் போட்டியாகும். இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள கனவு அணியில் 2 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். தெண்டுல்கர், ஹர்பஜன்சிங் ஆகியோரை அவர் தேர்வு செய்கிறார்.

 சுமித்தின் கனவு அணியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி இடம் பெறவில்லை.