இரண்டு பேரும் அணிக்கு திரும்புவதை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் மற்றும் வீரர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சர்வதேச போட்டியில் விளையாடாமல் இருக்கும் இருவரும் டி20 லீக் தொடரில் விளையாடி வருகிறார்கள்.
விரைவில் தொடங்க இருக்கும் வங்காள தேசம் பிரிமீயர் லீக்கில் இருவரும் களம் இறங்க இருக்கின்றனர். அதன்பின் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரிலும் விளையாடுகிறார்கள். இதில் சிறப்பாக விளையாடினால் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் அவர்களுக்கு நிச்சயமாக இடம்கிடைக்கும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் சிஇஓ கெவின் ராபர்ட்ஸ் கூறுகையில் ‘‘வங்காள தேச பிரிமீயர் லீக் மற்றும் ஐபிஎல் தொடரில் இருவருடைய ஆட்டம் எப்படி இருக்கிறது என்பது உண்மையிலேயே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இரு தொடர்களையும் கண்காணிப்பது முக்கியமானது.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துதல், நியாயம் மற்றும் நீதி ஆகியவற்றின் அடிப்படையில் எங்களுடைய தேர்வு இருக்கும். எந்தவித பிரச்சனையும் இல்லாமல் அவர்கள் அணிக்கு திரும்ப வேண்டும் என்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.