செய்திகள்

செல்பி எடுத்து சிக்கிய ஸ்மார்ட்போன் திருடன்

ஸ்மார்ட்போனினை வழிபறி செய்த திருடர்கள் அதில் செல்பி எடுத்து வசமாக மாட்டிக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இச்சம்பவத்தில் திருடர்களை பிடிக்க கூகுள் டிரைவ் சேவை உதவியாக இருந்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

கான்பூர் வீதிகளில் நடந்து செல்லும் போது வழிபறி மூலம் தவறவிட்ட ஒப்போ ஸ்மார்ட்போன் உரிமையாளர் கூகுள் டிரைவ் உதவியுடன் இரண்டு திருடர்களை கைது செய்ய உதவியுள்ளார். 

சாலையில் ஸ்மார்ட்போனில் பேசிக் கொண்டிருந்தவரிடம் ஸ்மார்ட்போனினை பறித்து சென்றவர்கள் அதில் செல்பி எடுத்துள்ளனர். இண்டர்நெட் இணைப்பு மற்றும் கூகுள் டிரைவ் பேக்கப் உள்ளிட்ட ஆப்ஷன்கள் ஆன் செய்யபப்ட்டிருந்ததை திருடர்கள் அறிந்திருக்கவில்லை. 

தொடர்ச்சியாக செல்பி எடுத்த திருடர்களின் புகைப்படங்கள் அதன் உரிமையாளரின் கூகுள் டிரைவ் கணக்கில் தானாக அப்லோடு ஆகிவிட்டது. இவற்றை கொண்டு திருடர்களை கண்டுபிடிக்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. திருடர்களின் செல்பிக்கள் சமூக வலைத்தளங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை செல்போன் திருட உதவியாக இருந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், செல்போன் வைத்திருக்கும் திருடனை பிடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் மனோஜ் ஷர்மா தான் தவறவிட்ட ஒப்போ எஃப்3 செல்பி எக்ஸ்பெர்ட் ஸ்மார்ட்போன் வாங்கி பத்து நாட்களே ஆகிறது என தெரிவித்துள்ளார்.