செய்திகள்

சாம்பார் வெங்காயம் 100 ரூபாயாக குறைந்தது

தென் மாவட்ட மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாம்பார் வெங்காயம் இதற்கு முன்பு 1 கிலோ ரூ.200 வரை விற்கப்பட்டது. ஆனால் இப்போது விலை குறைந்து 1 கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சென்னை:

மழையின் காரணமாக காய்கறி விளைச்சல் அதிகமாகி உள்ளதால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து அதிகமாக காய்கறிகள் வருகிறது.

இதுதவிர பெரியபாளையம், கிருஷ்ணகிரி, ஓசூர், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வேலூர், திருவண்ணாமலை, பொள்ளாச்சி பகுதிகளில் இருந்தும் உள்ளூர் காய்கறிகள் அதிகம் கொண்டு வரப்படுகிறது.

இதன் காரணமாக உச்சத்தில் இருந்த காய்கறி விலை வேகமாக குறைந்து வருகிறது.

குறிப்பாக தென் மாவட்ட மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாம்பார் வெங்காயம் இதற்கு முன்பு 1 கிலோ ரூ.200 வரை விற்கப்பட்டது. ஆனால் இப்போது விலை குறைந்து 1 கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெரிய வெங்காயம் கிலோ ரூ.50-க்கு விற்பனையாகிறது.

தக்காளி விளைச்சல் கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ராயக்கோட்டை, திருவண்ணாமலை பகுதிகளில் அதிகம் காணப்படுவதால் அங்கிருந்து தினமும் 40 முதல் 45 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

சென்னையில் உள்ள மளிகை கடைகளில் நேற்று 1 கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்று 2 ரூபாய் உயர்ந்து 12 ரூபாய்க்கு தக்காளி விற்கப்படுகிறது.

பெங்களூர் தக்காளி 1 கிலோ ரூ.20-க்கு விற்பனையாகிறது.

அயனாவரம் கடைகளில் விற்கப்படும் காய்கறிகள் விலை வருமாறு:-

கத்திரிக்காய்- ரூ.60

வெண்டைக்காய்-ரூ.60

பீன்ஸ்-ரூ.40

கேரட்-ரூ.80

முள்ளங்கி-ரூ.40

சவ்சவ்-ரூ.40

முருங்கைக்காய்-ரூ.160

தேங்காய்-ரூ.40

உருளைகிழங்கு-ரூ.40

சிறுகிழங்கு-ரூ.70

மல்லி,புதினா 1கட்டு-ரூ.5

SCROLL FOR NEXT