சதம் அடித்த குணதிலகா
பின்னர் 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக டிக்வெல்லா, குணதிலகா ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்க முதலே அதிரடியாக விளையாடினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 37 ஓவரில் 229 ரன்கள் குவித்தது. இருவரும் சதம் அடித்து அவுட் ஆனார்கள். டிக்வெல்லா 102 ரன்களும், குணதிலகா 116 ரன்களும் சேர்த்தனர்.
சதம் அடித்த டிக்வெல்லா
3-வது விக்கெட்டுக்கு மெண்டிஸ் உடன் உபுல் தரங்கா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 47.2 ஓவரில் 312 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தனர். மெண்டிஸ் 25 பந்தில் 28 ரன்களும், தரங்கா 32 பந்தில் 44 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சதம் அடித்த ஜிம்பாப்வே வீரர் மசகட்சா
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை 2-1 என முன்னிலையில் உள்ளது.