செய்திகள்

சுழலில் சிக்கி 126, 73 என சரணடைந்தது தென்ஆப்பிரக்கா- 278 ரன் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி

காலேயில் நடைபெற்று வந்த முதல் டெஸ்டில் சுழற்பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்காவை 278 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை. #SLvSA #Perera

மாலை மலர்

பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. டு பிளிசிஸை (49) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 126 ரன்னில் சுருண்டது. இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 161 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 161 ரன்கள் முன்னிலையுடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.

முதல் இன்னிங்சில் சதம் அடித்த கருணாரத்னே 2-வது இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடினார். அவர் 60 ரன்கள் எடுத்தார். இவரது அரைசதத்தால் இலங்கை அணி நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது தென்ஆப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளரான மகாராஜ் சிறப்பாக பந்து வீச இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 190 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், மகாராஜ் 4 விக்கெட்டும் கைப்பற்றினார்.

ஒட்டுமொத்தமாக இலங்கை அணி 351 ரன்கள் அதிகம் பெற்றிருந்தது. இதனால் 352 ரன்கள் வெற்றி இலக்காக தென்ஆப்பிரிக்கா அணிக்கு நிர்ணயித்தது இலங்கை.

காலே மைதானத்தில் 352 ரன்கள் என்பது இமாலய இலக்காகும். இந்த இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது. ஆனால் தில்ருவான், ஹெராத் சுழற்பந்து வீச்சில் சிக்கி தென்ஆப்பிரிக்கா 73 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் இலங்கை 278 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தில்ருவான் 6 விக்கெட்டும், ஹெராத் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.