செய்திகள்

மியாமி ஓபன் டென்னிஸ் - ஆஸ்டாபென்கோவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்டெப்ஹன்ஸ்

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்டாபென்கோவை வீழ்த்தி அமெரிக்க வீராங்கனை சொலேன் ஸ்டெப்ஹன்ஸ் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். #MiamiOpen2018 #SloaneStephens #JelenaOstapenko

மாலை மலர்

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. அதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு லதிவியா வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோவும், அமெரிக்க வீராங்கனை சொலேன் ஸ்டெப்ஹன்சும் முன்னேறினர்.

நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சொந்த மண்ணில் விளையாடிய சொலேன் ஸ்டெப்ஹன்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடினார். முதல் செட்டில் இருவரும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இறுதியில், சொலேன் ஸ்டெப்ஹன்ஸ் முதல் செட்டை 7-6 (7-5) என கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடிய சொலேன் ஸ்டெப்ஹன்ஸ் அந்த செட்டையும் 6-1 என கைப்பற்றினார். இதன்மூலம் 7-6 (7-5), 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற ஸ்டெப்ஹன்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். #MiamiOpen2018 #SloaneStephens #JelenaOstapenko