புகார் 
செய்திகள்

பேஸ்புக்கில் அவதூறு- கணவர் மீது பெண் புகார்

பேஸ்புக்கில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மாலை மலர்

மதுரை:

பேரையூரை அடுத்த அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த ராஜகனி (வயது 28) என்பவர் சாப்டூர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனக்கும், பேரையூரை அடுத்த சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (38) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் என் கணவருக்கும், சின்னபூலாம் பட்டியைச் சேர்ந்த மாலினிக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனை நான் தட்டிக்கேட்கேன். அவர் கேட்கவில்லை. எனவே நான் கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறேன்.

இந்த நிலையில் என் தாய் மற்றும் சகோதரி குறித்த ஆபாச பேச்சுக்களை எனக்கு தொடர்ந்து “வாட்ஸ்-அப்” மூலம் அனுப்பி வருகிறார்.

இது தவிர பேஸ்புக் பக்கத்தில் தன் போட்டோ மற்றும் செல்போன் நம்பரை குறிப்பிட்டு ஆபாச அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் குறிப்பிட்டு உள்ளார். இது தொடர்பாக சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் கண்ணனிடம் விசாரணை நடத்தி வருகிறார்.