இந்த போட்டியில் டோனி மற்றும் புவேனஸ்வர் குமார் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது இலங்கை அணிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நீண்ட நேர ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தனர். இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் இலங்கை அணியால் பந்து வீச முடியவில்லை. மூன்று ஓவர்கள் குறையாக வீசியது போட்டி நடுவர் ஆண்டி பைகிராப்ட் கண்டுபிடித்தார்.
ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி தொடரின்போது இலங்கை அணி மெதுவாக பந்து வீசியிருந்தது. மூன்று மாதத்திற்குள் மேலும் ஒருமுறை இவ்வாறு செய்ததால் தரங்காவிற்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது.
இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 33-வது ஓவரில் டோனி அடித்த பந்தை குணதிலகா பாய்ந்து பிடிக்க முயன்றார். அப்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் 10 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.