செய்திகள்

விபரீதமாக மாறிய ஸ்கை டைவிங் சாகசம் - மோதலில் பெண் உட்பட 3 பேர் பலி

ஆஸ்திரேலியாவில் பலூன் மூலம் வானில் பறக்கும் சாகச நிகழ்ச்சியின்போது ஒருவருடன் ஒருவர் மோதியதில் பெண் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

ஆஸ்திரேலியாவில் உள்ள குயீன்ஸ்லாந்து பகுதியில் பலூன் மூலம் வானில் பறக்கும் ஸ்கை டைவிங் விளையாட்டுக்கு பிரசித்தி பெற்ற மிஷன் பீச் பகுதியில் நேற்று பறந்து கொண்டிருந்த ஒருவர் அங்குள்ள வான்வெளியில் பறந்த இருவர் மீது பலமாக மோதினார்.

எதிர்பாராத இந்த விபத்தில் 50 வயது பெண் மற்றும் 30 வயது மதிக்கத்தக்க இரு ஆண்கள் தரையில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.