தற்கொலை 
செய்திகள்

இண்டூர் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை

இண்டூர் அருகே தோல்வியாதியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அடுத்துள்ள பாறைகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 58). இவருக்கு ராணி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

இந்தநிலையில் முனுசாமிக்கு கடந்தசில மாதமாக தோல்வியாதி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட முனுசாமி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் முனுசாமியை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முனுசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.