செய்திகள்

குற்றவாளியை கைது செய்தபோது போலீஸ்காரர்கள் மீது தாக்குதல்: 6 பெண்கள் மீது வழக்கு

மகாராஷ்டிர மாநிலத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசார் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 6 பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தானே:

மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி நகரின் பிரானி படா பகுதியில் மோசடி மற்றும் ஆள்மாறாட்ட வழக்கில் போலீசாரால் தேடப்படும் கமார் அலி ஜாப்ரி என்பவர் பதுங்கியிருப்பதாக நேற்று பிற்பகல் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் உடனடியாக அங்கு சென்று கமார் அலி ஜாப்ரி தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்து அவரை பிடித்தனர்.

அப்போது, போலீஸ்காரர்களை பெண்கள் சிலர் சூழ்ந்துகொண்டு கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவரை விடுவிக்கும்படி வலியுறுத்தினர். போலீசார் அவர்களை விலகிச் செல்லும்படி எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் பெண்கள் கலைந்து செல்லாமல் போலீசாரைத் தாக்கத் தொடங்கினர். இந்த தாக்குதலில் சில போலீஸ்காரர்களின் சீருடை கிழிந்துள்ளது. கற்களை வீசியும் தாக்கி உள்ளனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தாக்குதல்  தொடர்பாக 6 பெண்கள் மீது 2 பிரிவுகளில் சாந்தி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #tamilnews

SCROLL FOR NEXT