செய்திகள்

ஆப்கன்: உளவுத்துறை தலைமையகம் அருகே வெடிகுண்டு தாக்குதல் - 6 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள போலீஸ் உளவுத்துறை தலைமையகம் அருகே தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்.

மாலை மலர்

காபுல்:

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் போலீஸ் உளவுத்துறை தலைமையகம் உள்ளது. இன்று காலை ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, காரில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் கூட்டத்தில் புகுந்து உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க வைத்தனர்.

இந்த தாக்குதலில் 6 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக உள்துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும், ஆப்கானிஸ்தான் அரசு இதை உறுதிப்படுத்த வில்லை. கடந்த வாரம், இதே பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 போலீசார் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.