செய்திகள்

சித்தூர்-நெல்லூரில் காரில் கடத்திய ரூ.1.70 கோடி செம்மரம் பறிமுதல்: 6 பேர் கைது

சித்தூர்-நெல்லூரில் காரில் கடத்திய ரூ.1.70 கோடி செம்மரங்களை பறிமுதல் செய்த போலீசார் சென்னையை சேர்ந்த 6 பேரை கைது செய்தனர்.

மாலை மலர்

திருமலை:

சித்தூர் மாவட்டம் ரொம்பிசெரளா நாகினேனி செருவு பகுதிகளில் பீலேர் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில் செம்மரம் கடத்தி வந்தது தெரியவந்தது.

சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னப்பா பொர்க்கமந்தா, ஹரினாதா ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து ஒரு கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் தமிழ்நாடு, கர்நாடக ஆகிய மாநிலங்களில் இருந்து செம்மரம் வெட்டுவதற்காக வருபவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுப்பதுடன் செம்மரக் கடத்தலிலும் ஈடுபட்டது தெரியவந்தது.

நெல்லூர் மாவட்ட எஸ்.பி. ராமகிருஷ்ணா உத்தரவின் பேரில் நெல்லூர் மாவட்ட சிறப்பு போலீஸ் படையினர் நெல்லூர் அருகே உள்ள வனப்பகுதிகளில் ரோந்து சென்றனர்.

அப்போது ரூ.70 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை சிலர் கடத்த தயாராக வைத்திருப்பதை கண்டு பிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர்.

செம்மரம் கடத்த முயன்ற சென்னையை சேர்ந்த ஹரிகிருஷ்ணா, அகமது பஷீர், சிவகுமார், மற்றொரு சிவகுமார், திலீப்குமார் ஹசேன் ஷெரீப், ஜெகன்பாபு, மற்றும் நெல்லூரை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.

கடத்தல்காரர்களிடம் இருந்து 14 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். #tamilnews