கைது 
செய்திகள்

இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது

சிவகாசி அருகே இருசக்கர வாகனத்தை திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சிவகாசி:

சிவகாசி வடக்கு மாடவீதியில் வசித்து வருபவர் கோவிந்தசாமி மகன் முத்துக்குமார் (வயது 42). இவர் சிவகாசி தெற்குரதவீதியில் உள்ள ஒரு கடையின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது அந்த வாகனம் காணவில்லை. இது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் முத்துக்குமாரின் வாகனத்தை சிவகாசி காளியப்பாநகரை சேர்ந்த விக்னேஷ்வரன் (55) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதை பார்த்த முத்துக்குமார் அவரை பின் தொடர்ந்து சென்று பிடித்து சிவகாசி டவுன் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவர் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்து இருசக்கர வாகனத்தை மீட்டனர்.