செய்திகள்

சிவகாசியில் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் நேரடி ஆய்வு

சிவகாசியில் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்து செய்தார்.

மாலை மலர்

சிவகாசி:

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அதன்படி விருதுநகர் மாவட்டத்திலும் டெங்கு பரவாமல் தடுக்க கலெக்டர் சிவஞானம் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். மக்கள் குடியிருப்பு, பொதுமக்கள் கூடும் இடம், தொழிற்சாலை ஆகிய பகுதிகளில் டெங்கு தடுப்பு குறித்து கலெக்டர் ஆய்வு செய்து வருகிறார்.

மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள், பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர் சிவஞானம் சிவகாசி கீழ தாயில்பட்டியில் உள்ள 2 பட்டாசு ஆலைகளில் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ளுமாறும், தேங்கிய நீரை உடனே அகற்ற வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து அதே பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியிலும் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது தாசில் தார்கள் (சிவகாசி) ஸ்ரீதர், மனோகரன் (வெம்பக் கோட்டை), தனி தாசில்தார் சங்கரபாண்டியன் (பட்டாசு), வெம்பக்கோட்டை ஆணையாளர் வான்மதி, வட்டார வளர்ச்சி அலுவலர் தன சேகரன் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.