தற்கொலை 
செய்திகள்

சீர்காழி அருகே தீக்குளித்து இளம்பெண் தற்கொலை

சீர்காழி அருகே தீக்குளித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகார் சுனாமி நகரைச் சேர்ந்தவர் பிரவீன். மீனவர். இவரது மனைவி மோனிஷா(21). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது.

இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று இரவு மண்ணெய் ஊற்றி மோனிஷா தீ வைத்துக் கொண்டார். அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கும், மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை மோனிஷா உயிரிழந்தார். பூம்புகார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்