சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் நாயக்கனூர் பகுதியில் ரோந்து
சென்றனர். அப்போது அதேபகுதியை சேர்ந்த குமரேசன் (வயது 60) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின்
முரணாக பதில் கூறியதால் அவருடைய வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது
தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குமரேசனை கைது செய்தனர். மேலும் வீட்டில் இருந்த 250 கிராம் கஞ்சா, ரூ.25 ஆயிரத்தை போலீசார்
பறிமுதல் செய்தனர்.
இதேபோல் கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் கஞ்சா விற்ற தொன்னையன்கொட்டாய் கோகுல்நாத் (20) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.