சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் கடுமையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. சிறிய தவறு செய்தாலும்கூட அதற்கு குறைந்த பட்ச தண்டனையாக பிரம்பு அடி கொடுக்கப்படும். அதே போல் அங்கு மருத்துவ காரணங்களை தவிர வேறு எதற்காகவும் சுவிங் கம் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பேருந்து இருக்கையில் பல் குத்தும் குச்சிகளை குத்தி வைத்த காரணத்திற்காக 60 வயது மதிக்கத் தக்க முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் பேருந்து இருக்கையில் குச்சிகளை குத்தியிருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து சிசிடிவி கேமராவின் உதவியால் போலீசார் குற்றவாளியை கண்டுபிடித்தனர்.
அவர் செய்த தவறு நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டுக்கு மேல் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே கிடைக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
குச்சிகளை சொருகி வைத்ததற்கு சிறை தண்டனை கொடுப்பது அனைவரிடமும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.