செய்திகள்

மூர்க்கத்தனமாக நடந்த கொண்ட அதிகாரி: இண்டிகோ ஏர்லைன்ஸ் மீது பிவி சிந்து பாய்ச்சல்

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாக, அந்த நிறுவனம் மீது பிவி சிந்து சாடியுள்ளார்.

இதுகுறித்து பிவி சிந்து தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘கடைநிலை அதிகாரி அஜீதேஷின் நடவடிக்கை மிகவும் மோசமாக இருந்தது. என்னிடம் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டார். பயணிகளுடன் நல்லமுறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று ஏர்ஹோஸ்டர் ஆஷிமா அவருக்கு அட்வைஸ் கூற முயற்சி செய்தார்.

ஆனால், ஏர்ஹோஸ்டர் இடம் அவர் நடந்து கொண்ட விதம் எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. இதுபோன்றவர்களை ஊழியர்ளை வேலைக்கு வைத்தால், ஏர்லைன்சின் நற்பெயருக்கு கலங்கம் விளைவித்துவிடுவார்கள்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.