செய்திகள்

அடுத்த ஆண்டு 43 நாட்கள் அரசு விடுமுறை: சிக்கிம் அரசு அறிவிப்பு

சிக்கிம் மாநில அரசு அடுத்த ஆண்டில் 43 நாட்களை அரசு விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது.

காங்டாங்:

சிக்கிம் மாநிலத்தில் வாரத்துக்கு ஆறு நாள் வேலை செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் அரசு ஊழியர்கள் எப்போது விடுமுறை கிடைக்கும் என்ற ஏக்கத்தில் உள்ளனர். இதற்கிடையே, இந்த ஆண்டுக்கான அரசு விடுமுறையாக 37 நாள்களை அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான அரசு விடுமுறை நாள்கள் 43 என மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

சிக்கிம் மாநில கவர்னரின் உத்தரவின் பேரில் 43 நாட்கள் அரசு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இந்த விடுமுறை நாள்கள் பொருந்தும்.

மேலும், தொழிலாளர் தினம், நேபாள மலையேற்ற வீரர் டென்சிங் பிறந்த தினம், திபெத்திய மதகுரு தலாய் லாமா பிறந்த தினம் மற்றும் சாட் பூஜை உள்ளிட்ட 4 தினங்களில் ஏதாவது ஒரு நாளில் அரசு ஊழியர்கள் தங்களது தேவைக்கு ஏற்ப பொது விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவித்துள்ள 43 விடுமுறை நாள்களில் 5 தினங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT