விபத்து பலி 
செய்திகள்

சித்தர்கோவில் அருகே விபத்தில் தொழிலாளி பலி

சித்தர்கோவில் அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம்பிள்ளை:

இளம்பிள்ளை அருகே உள்ள ரெட்டி மணியக்காரன் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 47). நெசவுத்தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் மொபட்டில் சேலத்தில் இருந்து இளம்பிள்ளைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சித்தர்கோவில் அருகே வேகத்தடையில் மொபட் ஏறி இறங்கிய போது, நிலைத்தடுமாறி அவர் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.