பறிமுதல் செய்யப்பட்ட மான் கொம்புகள், புலி நகம், யானை தந்தம், மயில் தோகை 
செய்திகள்

கூடலூரில் யானை தந்தம், மான் கொம்புகள் வைத்திருந்த சித்த மருத்துவர் கைது

கூடலூரில் யானை தந்தம், மான் கொம்புகள் வைத்திருந்த சித்த மருத்துவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடலூர்:

தேனி மாவட்டம் கூடலூர் கர்ணம் பழனிவேல்பிள்ளை தெருவை சேர்ந்தவர் நந்தகோபால் (வயது 42). சித்த மருத்துவர். இவரது வீட்டில் மான்கொம்பு, புலி நகம், யானை தந்தம் வைத்திருப்பதாக கம்பம் கிழக்கு வனச்சரகர் (பொறுப்பு) அருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனச்சரகர் அருண்குமார் மற்றும் கூடலூர் தெற்கு போலீசார், நந்தகோபால் வீட்டில் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டுக்குள் ஒரு பையில் 2 மான் கொம்புகள், 2 புலி நகம், சிறிய யானை தந்தம் ஒன்று, 2 மயில் தோகை ஆகியவற்றை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவரது உத்தரவின்பேரில் நந்தகோபாலை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மான் கொம்புகள், புலி நகம், யானை தந்தம், மயில் தோகை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து நந்தகோபாலிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT