செய்திகள்

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகையா - என்ன சொல்கிறார் சித்தராமையா?

பெங்களூரு பரப்பன அக்ரஹா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டு வருவதாக எழுந்த புகார் குறித்து கர்நாடக முதல்வர் விளக்கமளித்துள்ளார். #Sasikala

மாலை மலர்

பெங்களூரு:

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவருக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாகவும் இதற்காக இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியதாகவும் சிறைத்துறை அதிகாரி ரூபா பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

இதனை அடுத்து, இந்த புகார் குறித்து மாநில லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது. சசிகலாவுக்கு வி.ஐ.பி சலுகை வழங்க அம்மாநில முதல்வர் அலுவலகத்தில் இருந்து வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், இந்த புகாரை முதல்வர் சித்தராமையா மறுத்துள்ளார். சிறப்பு வசதிகளோ, வி.ஐ.பி சலுகைகளோ வழங்க சிறைத்துறை டி.ஜி.பி.க்கு உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கவில்லை என அவர் தெரிவித்தார். #Sasikala