செய்திகள்

கர்நாடகாவில் அரசு ஊழியர்கள் சம்பளம், ஓய்வூதியம் 30 சதவீதம் உயர்த்தி அறிவிப்பு

கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியதாரர்களின் மாத ஓய்வூதியம் 30 சதவிகிதம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #KarnatakaBudget

பெங்களூரு:

கர்நாடகம் மாநிலத்தின் முதல் மந்திரி சித்தராமையா தலைமையிலான அரசு இன்று 2018-19-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்தது. நிதித்துறையை கைவசம் வைத்துள்ள சித்தராமையா பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதமாக அதிகரிக்கும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். 

6-வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் 5.93 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 5.73 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு 30 சதவிகித ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆண்டுக்கு 10,508 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #KarnatakaBudget

SCROLL FOR NEXT