செய்திகள்

அமெரிக்க உளவு அமைப்பின் தலைமையகம் அருகே துப்பாக்கி சூடு

அமெரிக்க ரகசிய உளவு அமைப்பான தேசிய பாதுகாப்பு முகமையின் தலைமையகம் அருகே நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டன்:

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் புறநகரில் மேரிலேண்ட் பகுதியில், அமெரிக்க ரகசிய உளவு அமைப்பான தேசிய பாதுகாப்பு முகமையின் தலைமையகம் உள்ளது. நேற்று அப்பகுதியில் வேகமாக வந்த ஒரு கார், தலைமையக காம்பவுண்டு சுவர் மீது மோதியது.

உஷார் அடைந்த போலீசார், அந்த கார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். காரின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. காரில் இருந்த மர்ம நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர். மற்றொருவரும் காயம் அடைந்தார்.

இந்த வீடியோ, டெலிவிஷன்களில் ஒளிபரப்பானது. சம்பவம் பற்றி, ஜனாதிபதி டிரம்பிடம் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. 

SCROLL FOR NEXT