செய்திகள்

2022 காமன்வெல்த் போட்டியில் டி20 கிரிக்கெட்?: துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு ஆபத்து

பர்மிங்காமில் 2022-ல் நடைபெற இருக்கும் காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டிக்குப் பதிலாக டி20 கிரிக்கெட் போட்டியை சேர்க்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாலை மலர்

2022-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டி தென்ஆப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தென்ஆப்பிரிக்க அரசு நிதி பிரச்சினை காரணமாக டர்பனில் போட்டியை நடத்த இயலாது என்று கூறியது. இதனால் புதிதாக விண்ணப்பம் கோரப்பட்டது. இதில் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகர் போட்டியை நடத்த முன்வந்தது. இதற்கு காமன்வெல்த் கேம்ஸ் பெடரேசன் அனுமதி அளித்தது.

அனுமதி அளித்ததும் பர்மிங்காம் அதற்கான வேலைகளை செய்ய ஆரம்பித்துள்ளது. ஒரு நாட்டில் விளையாட்டு நடத்தப்படும்போது அந்த நாடு 7 போட்டிகளை சேர்க்க பரிந்துரை செய்யலாம். அதன்படி தற்போது ஜூடோ, டேபிள் டென்னிஸ், மல்யுத்தம், ஜிம்னாஸ்டிக், டைவிங், சைக்கிளிங், 3V3 கூடைப்பந்து ஆகிய போட்டிகளை சேர்க்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி சுடுதல் போட்டியை விருப்ப போட்டியாக வைத்துள்ளது. இதேநேரத்தில் ‘ஆண்கள் - பெண்கள் இணைந்து விளையாடும் டி20 கிரிக்கெட் போட்டிக்கும் (mixed-gender Twenty20 cricket )’ பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.