விபத்து பலி 
செய்திகள்

சூளகிரி அருகே வாகனம் மோதி பெண் பலி

சூளகிரி அருகே வாகனம் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூளகிரி:

சூளகிரி அருகே கொல்லப்பள்ளியில் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த விபத்து குறித்து சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து இறந்த பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT