சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கிருஷ்ணா பாளையம், பஸ்தலப்பள்ளி பகுதியில் 15 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்த போலீசார் 250 லிட்டர் ஊறலையும் அழித்தனர். பின்னர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றதாக பஸ்தலப்பள்ளி கிரா மத்தை முனிராஜ், கோவிந்தராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.