செய்திகள்

எங்களுக்கே டவுட் இருந்துச்சி - வெற்றி குறித்து ம.பி முதல்வர் சவுகான் கருத்து

சில நாட்களுக்கு முன்னர் திரிபுராவில் பா.ஜ.க ஆட்சியமைக்கும் என கூறிய போது யாரும் நம்பவில்லை என மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் கருத்து தெரிவித்துள்ளார். #BJP

மாலை மலர்

போபால்:

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மார்சிஸ்ட் கட்சியை பா.ஜ.க வீழ்த்தி ஆட்சியமைக்க உள்ளது. இந்த வெற்றி அந்த கட்சியினருக்கே எதிர்பாராத மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான், “சில நாட்களுக்கு முன்னர் திரிபுராவில் பா.ஜ.க ஆட்சியமைக்கும் என கூறிய போது யாரும் நம்பவில்லை” என தெரிவித்துள்ளார்.

மேலும், “எனக்கே பா.ஜ.க ஆட்சியமைக்கும் என்பது சந்தேகமாக இருந்தது. ஏனென்றால், அங்கு நீண்ட காலமாக ஒரு அரசு இருந்தது. எனவே இந்த வெற்றி அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானது” எனவும் அவர் தெரிவித்தார்.