சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவின் தம்பி ஷிவ்பால் யாதவ். முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் கட்சியின் தலைமை பொறுப்புக்கு வந்த பின்னர், கட்சியில் இருந்து ஷிவ்பால் யாதவ் ஓரங்கட்டப்பட்டார்.
இந்த நிலையில் ஷிவ்பால் யாதவ் புதிய கட்சி தொடங்க முடிவு செய்துள்ளார். அதற்கு மதசார்பற்ற சமாஜ்வாதி மோர்ச்சா என பெயர் சூட்ட திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது, “கட்சியில் எனக்கு எந்த பணியும் வழங்கப்படவில்லை. எனவே “மதசார்பற்ற சமாஜ்வாதி மோர்ச்சா” என்ற பெயரில் புதிய கட்சி தொடங்க இருக்கிறேன்.
சமாஜ்வாதி கட்சி தொடர்ந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என நீண்ட காலமாக விரும்பினேன். கட்சியில் இருந்து ஒதுங்கி இருப்பவர்களை வரவேற்கிறேன்” என்றார்.