இந்திராணி முகர்ஜி 
செய்திகள்

ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணி முகர்ஜிக்கு ஜாமீன் மறுப்பு

ஷீனா போரா வழக்கின் முக்கிய குற்றவாளியான இந்திராணி முகர்ஜிக்கு கோர்ட்டு ஜாமீன் கொடுக்க மறுத்துவிட்டது. ஏற்கனவே 4 முறை இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாலை மலர்

மும்பை :

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் முன்னாள் மனைவியான இந்திராணி முகர்ஜி பெற்ற மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு மும்பை பைகுல்லா பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் உடல்நலம் பாதிப்பு மற்றும் ஜெயிலில் கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதாக கூறி 45 நாட்களுக்கு இடைக்கால ஜாமீன் கேட்டு மும்பை சி.பி.ஐ. கோர்ட்டில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்து இருந்தார்.

அந்த மனுவில், உயர்மட்ட கமிட்டி வழிகாட்டுதலின்படி தனக்கு கண்டிப்பாக கோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என இந்திராணி முகர்ஜி கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜகதாலே, இந்திராணி முகர்ஜிக்கு ஜாமீன் கொடுக்க மறுத்துவிட்டார். ஏற்கனவே 4 முறை இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஷீனா போரா வழக்கின் முக்கிய குற்றவாளியான இந்திராணி முகர்ஜி கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.