செய்திகள்

ஆஸ்திரேலியாவில் அலைச்சறுக்கு வீரரை சுறா தாக்கிய விவகாரம் - சர்வதேச போட்டிகள் ஒத்திவைப்பு

ஆஸ்திரேலியாவில் அலைச்சறுக்கு வீரரை சுறா தாக்கியதை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு நடைபெற இருந்த சர்வதேச அலைச்சறுக்கு போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

கான்பெரா:

ஆஸ்திரேலியாவில் உலக அலைச்சறுக்கு லீக் போட்டிகள் நடைபெற இருந்தன. இதையடுத்து, நேற்று கிரேஸ் டவுன் பகுதியில் உள்ள கடற்கரையில் அலைச்சறுக்கு வீரர் ஒருவர் பயிற்சி செய்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு அந்த சுறா அந்த வீரரை தாக்கியது. சுறாவிடம் மாட்டிக்கொண்ட வீரர் அதனிடமிருந்து தப்பிக்க போராடினார். பின்னர் காலில் ஏற்பட்ட காயத்துடன் அவர் உயிர்பிழைத்தார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக அலைச்சறுக்கு போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உலக அலைச்சறுக்கு லீக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போட்டியை விட வீரர்களின் பாதுகாப்பு தான் மிக முக்கியம் என அறிவித்துள்ளனர்.

பாதுகாப்பு குறித்து சோதனை செய்த பின்னரே போட்டிகள் நடத்தப்படும். அதன்பின் போட்டிக்கான தேதிகள் அறிவிக்கப்படும் என தெரிவித்தனர். #tamilnews