செய்திகள்

சரத் பவார் இந்த லெவலுக்கு இறங்கி பேசுவார் என எதிர்பார்க்கவில்லை - பட்னாவிஸ் தாக்கு

பிரதமர் மோடியை கொல்ல சதி நடப்பதாக கூறி பா.ஜ.க. அனுதாபம் தேடுவதாக சரத் பவார் கூறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது என மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் கூறியுள்ளார். #ModiAssassinationPlot #FadnavisCriticisedPawar

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் 5 பேரை போலீசார் அண்மையில் கைது செய்தனர். அவர்களுக்கு மாவோயிஸ்டு இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஒரு கடிதத்தில் பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் திட்டமிட்டது தெரிய வந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமருக்கான பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.