புதுச்சேரி:
சண்முகாபுரம் நிலைய வீதியை சேர்ந்தவர் பிரகாஷ். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி (வயது29). இவர்களுக்கு திருமணமாகி 3½ ஆண்டுகள் ஆகிறது. 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் நேற்று குழந்தை சாப்பிடவில்லை என கூறி பரமேஸ்வரி குழந்தையை அடித்தார். அப்போது வீட்டில் இருந்த பிரகாஷ் இதனை பார்த்து மனைவியை கண்டித்தார். பின்னர் பிரகாஷ் வேலைக்கு சென்று விட்டார்.
கணவன் கண்டித்ததால் மனமுடைந்த பரமேஸ்வரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அவர் சேலையால் மின்விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார்.
அப்போது பக்கத்து வீட்டினர் பார்த்து பரமேஸ்வரியை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பரமேஸ்வரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.