தொழிலாளி மரணம் 
செய்திகள்

சண்முகாபுரத்தில் படிக்கட்டில் தவறிவிழுந்து கட்டிட தொழிலாளி பலி

சண்முகாபுரத்தில் மாடிபடிக்கட்டில் தவறி விழுந்து கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.

புதுச்சேரி:

புதுவை சண்முகாபுரம் வி.பி.சிங் நகர் இந்திராகாந்தி வீதியை சேர்ந்தவர் பாபு (வயது47), கட்டிட தொழிலாளி. இவருக்கு தேவகி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். பாபுவுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை வேலை முடிந்து பாபு வீட்டுக்கு மதுகுடித்துவிட்டு வந்தார். அப்போது குடிபோதையில் மாடி படிக்கட்டில் ஏறியபோது தடுமாறி பாபு கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பாபுவை அவரது மனைவி தேவகி மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று இரவு பாபு பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT