செய்திகள்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: நீதிமன்றம் தலையிட முடியாது - சண்முநாதன்

18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சண்முநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மாலை மலர்

செய்துங்கநல்லூர்:

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சண்முநாதன் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சபாநாயகர் 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தது சரியானது தான்.சட்டம் அனைவருக்கும் பொதுவானது. சபாநாயகருக்கு அனைத்து எல்.எல்.ஏக்களும் கட்டுப்பட்டவர்கள். கொறடா என்ன சொல்கிறாரோ அதை சபாநாயகர் நிறைவேற்ற வேண்டும்.

நீதிமன்றம் சபாநாயகர் செய்த தகுதி நீக்கத்திற்கு தடை விதிக்க முடியாது. அவர்களுக்கு தடைவிதிக்கவும் அதிகாரம் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலும் நடைபெறுவது தான் உண்மையான பொதுக்குழு கூட்டம்.

அந்த கூட்டத்தில் சசிகலாவை நீக்கம் செய்யும் போது அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். எனவே இது தான் உண்மையான பொதுக்குழு கூட்டம். 95 சதவீதம் பேர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.