செய்திகள்

நிதாஹாஸ் தொடரில் இருந்து வங்காள தேச கேப்டன் விலகல்

இலங்கையில் 6-ந்தேதி தொடங்கும் நிதாஹாஷ் தொடருக்கான வங்காள தேச அணியில் இருந்து சாகிப் அல் ஹசன் விலகியுள்ளார். #NidahasTrophy

கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின்போது வங்காள தேச கேப்டன் சாகிப் அல் ஹசனின் இடது கை சுண்டு விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் அவர் இடம்பெறவில்லை.

ஆனால், முத்தரப்பு டி20 தொடருக்கான வங்காள தேச அணியில் சாகிப் அல் ஹசன் இடம்பிடித்திருந்தார். சுண்டு விரல் காயம் காரணமாக சிகிச்சைக்காக பாங்காக் சென்றிருந்தார். ஆனால், காயம் அடைய இன்னும் காலம் பிடிக்கும் என்பதால் முத்தரப்பு தொடரில் இருந்து விலகியுள்ளார்.