செய்திகள்

இலங்கை வீரர்களுடன் மோதல்- ஷாகிப் அல் ஹசன் உள்பட 2 பேருக்கு 25 சதவீதம் அபராதம்

கொழும்பில் நேற்று நடைபெற்ற டி20 போட்டியின்போது மோதலில் ஈடுபட்ட வங்காள தேச கேப்டன் உள்பட இருவருக்கு தலா 25 சதவீதம் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது. #SLvBAN

கடைசி ஓவரில் வங்காள தேச அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவை என்ற நிலையில், இலங்கை வீரர் உதானா முதல் இரண்டு பந்துகளையும் பவுன்சராக வீசினார். ஆனால் நடுவர் நோ-பால் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் கோபம் அடைந்த வங்காள தேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் கடும் கோபம் அடைந்தார். அத்துடன் வீரர்களை வெளியில் வருமாறு சைகை காட்டினார்.

அப்போது இந்த தகவலை களத்தில் இருந்து வீரர்களுக்கு தெரிவிக்கு ரிசர்வ் வீரர் நுருல் ஹசன் மைதானத்திற்குள் சென்றார். அப்போது நுருல் ஹசன் இலங்கை வீரர்களுடன் தகராறில் ஈடுபட்டார். ஐசிசியின் வீரர்கள் நன்னடத்தையை இவர்களின் செயல்பாடுகள் மீறிவிட்டதாகவும், ஐசிசியின் விதியின்படி இது, லெவல்-1ல் வருவதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT