முதலில் பேட்டிங் செய்த பாக்டூன்ஸ் 10 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் குவித்தது. பகன் சமான் 22 பந்தில் அவுட்டாகாமல் 45 (தலா மூன்று பவுண்டரி, மூன்று சிக்ஸ்) ரன்னும், டவ்சன் 23 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 44 ரன்னும் சேர்த்தனர்.
பின்னர் 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மரதா அரேபியன்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக கம்ரான அக்மல், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். ஹேல்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த கம்ரான் அக்மல் 5 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த லென்டில் சிம்மன்ஸ் 4 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
ஷேசாத் போல்டாகிய காட்சி
ஹேல்ஸ் அதிரடியாக விளையாடியதால் முதல் 4 ஓவரில் 45 ரன்கள் எடுத்திருந்தது. 5-வது ஓவரை ஷாகித் அப்ரிடி வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ரசொவ் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த வெயின் பிராவோ, சேவாக் அடுத்தடுத்து எல்.பி.டபிள்யூ ஆனார்கள். இதனால் அப்ரிடி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.