நெல்லை:
செய்துங்கநல்லூர் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் சுப்பம்மாள் (வயது 55). இவர் சம்பவத்தன்று தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளில் செய்துங்கநல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வேகத் தடையில் மோட்டார் சைக்கிள் ஏறிஇறங்கிய போது எதிர்பாரதவிதமாக சுப்பம்மாள் தவறிகீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.