செய்திகள்

செவ்வாப்பேட்டை அருகே வாலிபர் வெட்டிக் கொலை

செவ்வாப்பேட்டை அருகே வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

செவ்வாப்பேட்டை:

செவ்வாப்பேட்டையை அடுத்த கூடப்பாக்கத்தை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மகன் பிரபு (வயது 21), எலெக்ட்ரீசியன்.

நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற பிரபு பின்னர் திரும்பி வரவில்லை. அவரை பெற்றோர் தேடி வந்தனர்.

இந்த நிலையில் அதே பகுதி கூடப்பாக்கம் -ஸ்ரீபெரும்புதூர் சாலை யோரத்தில் பிரபு வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வெள்ளவேடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பிரபுவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

கொலைக்கான காரணம் கொலையாளிகள் குறித்து உடனடியாக தெரியவில்லை. பெண் தகராறில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

பிரபுவின் நண்பர்கள் யார்? அவர் யாருடன் கடைசியாக செல்போனில் பேசினார் என்ற விவரத்தை சேகரித்து வருகின்றனர். வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.