சேவூர்:
சேவூர் அருகே சாராயம் காய்ச்சுவதாக அவினாசி மது விலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்
சோதனை மேற்கொண்டனர்.
இதில் சேவூர் அருகே மொண்டிபாளையம் பகுதியில் 2 இடங்களில் 2 பேர் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதையடுத்து அவினாசி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராயம் காய்ச்சிய செட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (வயது49), செல்வராஜ் (47) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 8 லிட்டர் சாராயம், 30 லிட்டர் சாராய ஊறல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.