ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் சில்கானா மாவட்டம் ஐதராபாத்தின் சில்கா நகர் பகுதியில் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் 3 மாத குழந்தையின் தலை மட்டும் தனியாக கிடந்து உள்ளது. இது குறித்து நேற்று காலை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் வந்து பார்க்கும் போது கூர்மையான ஆயுதத்தால் குழந்தையின் தலை வெட்டப்பட்ட நிலையில் கூரை மீது வைக்கப்பட்டு உள்ளது.
நேற்று முன் தினம் சந்திர கிரகணம் ஏற்பட்டது. அப்போது இந்த குழந்தை பலி கொடுப்பதற்காக தலையை வெட்டி கூரை மீது வைத்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து ரச்சகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அது பெண் குழந்தையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. குழந்தையின் உடல் இன்னும் கிடைக்கவில்லை. எனவே, அந்த குழந்தை ஆணா பெண்ணா என்பதை போலீசாரால் உறுதிபடுத்த முடியவில்லை.
புதன்கிழமை சந்திர கிரகணம் என்பதால் யாரும் வீட்டின் மாடிக்கு செல்லவில்லை. மறுநாள் (நேற்று) காலை அந்த வீட்டில் வசித்த பெண் மாடிக்கு சென்றபோது, குழந்தையின் தலை கிடந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் கூறியுள்ளார். #tamilnews