திருச்சி:
திருச்சி வனச்சரகம் கண்ணனூர் பிரிவுக்கு உட்பட்ட காப்புக்காட்டில் அத்துமீறி நுழைந்து முயல்களை வேட்டையாட முயற்சித்த கண்ணனூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 37) வனத்துறையினர் கைது செய்தனர். அவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல ஏவூர் அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கார்த்திக், சந்துரு, சந்தோஷ், குணசேகர், பாலமுருகன், கலைச்செல்வன் மற்றும் பிரகாஷ் ஆகியோர் முயல்கள் வேட்டையாடி, அதை ‘டிக்-டாக்’ செயலியில் பதிவேற்றம் செய்ததாக கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், திருச்சி மாவட்ட வனக்கோட்ட அலுவலகம் முன்பு, மறைந்த வனக்காவலர் சந்துரு நினைவாக மரக்கன்றுகளை நட வைத்தனர்.