மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்ட 7 பேர் இன்று பதவியேற்பு
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்ட நடன கலைஞர் சோனல் மன்சிங், பேராசிரியர் ராகேஷ் சின்ஹா உள்பட 7 பேர் பதவியேற்றுக் கொண்டனர். #parliamentarymonsoonsession #Rajyasabha
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி முக்கிய மசோதாக்கள் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. எனவே எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.