செய்திகள்

ஆஸ்திரேலியாவில் பயங்கரம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சுட்டுக்கொலை

ஆஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு குழந்தைகள் உள்பட 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #MassShooting

சிட்னி:

ஆஸ்திரேலியாவில் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது ஆஸ்மிங்டன் நகரம். இங்குள்ள ஒரு வீட்டின் வெளியே இரண்டு துப்பாக்கிகள் கிடப்பதை கண்டு அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அங்கு போலீசார் விரைந்து வந்தனர். பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு 7 பேரின் உடல்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ந்தனர். அதில் நான்கு குழந்தைகளும் அடக்கம்.

தொடர்ந்து 7 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் அவற்றை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர்கள் 7 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

அவர்கள் என்ன காரணத்துக்காக சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 22 ஆண்டுகளில் நடைபெற்ற மிக பெரிய துப்பாக்கி சூடு சம்பவம் இது என போலீசார் தெரிவித்துள்ளனர். 

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது ஆஸ்திரேலியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. #MassShooting

SCROLL FOR NEXT