செய்திகள்

குஜராத்: மெஹ்சானா - உன்ஜா நெடுஞ்சாலையில் கார் மீது பேருந்து மோதியதில் 7 பேர் பலி

குஜராத் மாநிலம் மெஹ்சானா - உன்ஜா நெடுஞ்சாலையில் கார் மீது பேருந்து மோதிய பயங்கர விபத்தில் 7 பேர் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் உன்ஜா மாவட்டத்தில் உள்ள மெஹ்சானா - உன்ஜா நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பயங்கரமான விபத்து ஏற்பட்டது. ராஜஸ்தான் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து கார் மீது மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் காரில் பயணம் செய்த 7 வாலிபர்கள் எனக்கூறப்படுகிறது. இவர்கள் அகமதாபத்திலிருந்து வந்து கொண்டிருந்தனர். வேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என போலீசார் கருதுகின்றனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT