ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஷரு மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுச்சாலையில் ஒரு கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் மொத்தம் 8 பேர் பயணம் செய்தனர்.
கார் நமா என்ற கிராமப்பகுதியை கடந்தபோது சாலையின் எதிரே வந்துகொண்டிருந்த லாரி மீது பயங்கர வேகத்தில் மோதியது.
இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ராஜஸ்தான் மாநில முதல்மந்திரி அசோக் கெலாட் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.