செய்திகள்

சீரியல் கில்லர் சோப்ராஜுக்கு நேபாள மருத்துவமனையில் இதய ஆபரேசன்

நேபாள சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜுக்கு இதய அறுவை சிக்ச்சை மேற்கொள்ளப்பட்டது.

1970-களில் நடந்த தொடர் கொலைகளில் சம்பந்தப்பட்ட சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ் (வயது 73), அமெரிக்க பெண் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று நேபாளத்தின் காத்மாண்டு சிறையில் அடைக்கப்பபட்டுள்ளார்.

12 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் சோப்ராஜ், சமீபத்தில் சிறையில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவரது இதய வால்வில் கசிவு இருந்ததை கண்டுபிடித்த டாக்டர்கள், ஆபரேசன் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தனர்.

SCROLL FOR NEXT